சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய,…
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..
நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர். மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.
யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம் 09.07.2024 துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த 03.07.2024 மற்றும் 04.07.2024 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளதுஇதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.இந்த போட்டிகளில் யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும் , மயில்வாகனம்தமிழ் வித்தியாலயம் 2.5…
இன்று (12.07.2024) எமது வித்தியாலயத்தின் மாணவ முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
விவேகானந்த சபை – கொழும்பு.அகில_இலங்கை_சைவசமய_பாடப்_பரீட்சையில்_வடமாகாண_ரீதியில்_சிறப்பு_சித்தி. செல்வி_லக்சிகா_தயானந்தன் இன்றைய தினம் இவருக்கான சிறப்புச் சான்றிதழும் பண வவுச்சரும் வித்தியாலய முதல்வர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.சைவ சமயத்தின் அடையாளங்களை வித்திட்டுச்செல்லும் கொழும்பு, விவேகானந்த சபையினருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.வளர்க உம் சைவப்பணி.வாழ்க வளமுடன்.
கடந்த வாரம் வெளியான உயர்தர பரிட்சையின் பெறுபேறுகளின் அடிப்டையில் எமது பாடசாலையானது துணுக்காய் வலயத்தில் சிறந்த பெறுபேற்றை பதிவு செய்துள்ளது .அந்தவகையில் 12 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைகழகத்துக்கு தெரிவாகி உள்ளனர் குறிப்பாக இரண்டு மாணவர்கள் பொறியியல் துறைக்கு தெரிவு செய்யபட்டது சிறப்பம்சம் ஆகும் இந்த சிறந்த பெறுபேற்றை அடைவதற்கு உதவிய அதிபர் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் கல்விச்சமூகத்தினருக்கும் எமது நன்றியை தெரிவித்துகொள்கிறோம்
“#விழுதுகள்_கூடி_வேரில்_சந்திப்போம்“ 12.05.2024 அன்று நடைபெற்ற எமது பாடசாலையில் கடமையாற்றிய ஓய்வநிலை அதிபர், ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா. முழு அனுசரணை : #சொக்கலிங்கம்_சரஸ்வதி_குடும்பம்_பாரதிநகர்_யோகபுரம்.
பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் 2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு -03 நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு 2024.03.21 ம் திகதி மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. மாலதி முகுந்தன் வலயக் கல்விப் பணிப்பாளர் துணுக்காய்…
பொதுக்கூட்டமும் , புதிய நிர்வாகத் தெரிவும்-2024