
சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய, முல்லைத்தீவு – துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்த்துள்ளனர். உயர்தரத்திற்கான தகுதி அதன்படி, 4 மாணவர்கள் 9A சித்திகளையும், இரண்டு மாணவர்கள் 8A C சித்திகளையும், மூன்று மாணவர்கள் 7A சித்திகளையும் பெற்றுள்ளனர். மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 83.3 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.