இன்றைய தினம் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகள் தொடர்பான பெற்றோர் கலந்துரையாடல் சிறப்புற நடைபெற்றது.
அதிபர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் துணுக்காய் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலையின் அபிவிருத்தி இணைப்பாளருமாகிய திரு சா.பிரதீவானந் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு ச.கிரிதரன், பிரதி அதிபர்கள், மற்றும் புலம்பெயர்ந்த பழையமாணவர்களின் பிரதிநிதிகள் உள்நாட்டு பழையமாணவர்கள் (Zoom செயலி ஊடாக) பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.