பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம்
2024ம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த 2000 மாணவர்களுக்கு பாரி சுயகற்றல் ஏடு -03 நூல்களை விநியோகிக்கும் நிகழ்வு 2024.03.21 ம் திகதி மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் திரு.தி.ஜோன்குயின்ரஸ் அவர்களும் சிறப்பு விருந்தினராக திருமதி. மாலதி முகுந்தன் வலயக் கல்விப் பணிப்பாளர் துணுக்காய் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.