யோகபுரம் மகாவித்தியாலயம் முதலிடம் 09.07.2024 துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட துணுக்காய் கோட்டத்துக்குட்ப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த 03.07.2024 மற்றும் 04.07.2024 ஆகிய தினங்களில் மல்லாவி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுள்ளதுஇதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.இந்த போட்டிகளில் யோகபுரம் ஆரம்ப பாடசாலை 5 புள்ளிகளையும் , மயில்வாகனம்தமிழ் வித்தியாலயம் 2.5 புள்ளிகளையும், அனிஞ்சியன்குளம் தமிழ் கலவன் வித்தியாலயம் 37 புள்ளிகளையும், ஜயன்கன்குளம் மகாவித்தியாலயம்103 புள்ளிகளையும், தேறாங்கண்டல் அ.த.க.பாடசாலை 84 புள்ளிகளையும், துணுக்காய் அ.த.க பாடசாலை 17 புள்ளிகளையும்,தென்னியன்குளம் அ.த.க.பாடசாலை 44 புள்ளிகளையும்,யோகபுரம் மகாவித்தியாலயம் 404 புள்ளிகளையும், மல்லாவி மத்தியகல்லூரி 385.5புள்ளிகளையும், கோட்டைகட்டியகுளம் மகாவித்தியாலம் 42 புள்ளிகளையும், கல்விளான்குளம் மகாவித்தியாலம் 18 புள்ளிகளையும் பெற்றுள்ளன.இதனடிப்படையில் துணுக்காய் கோட்ட பாடசலைகளில் யோகபுரம் மகாவித்தியாலம் முதன்மை நிலை வகித்துள்ளமை குறிப்பிடத்தள்ளது.துணுக்காய் வலயத்தில் கல்வி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகளில் யோகபுரம் மகாவித்தியாலயம் முன்னிலையில் திகழ்ந்து வருகின்றமையை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.