மு/யோகபுரம் மகா வித்தியாலயம்
பழைய மாணவர் சங்கம்
செயற்பாட்டறிக்கை
16.01.2023 – 31.08.2023
1) வைரவிழா அபிவிருத்தி வேலை திட்டத்திற்காக வருவிக்கப்பட்ட மொத்த நிதி – 27512800/= (10757310 – 16455490)
2) பாடசாலை வரலாற்றின் முதன்முதலாக பாடசாலை சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் வெளியீடு செய்யப்பட்டது 679780/=
3) பாடசாலை தொடர்பான பாடல் இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது – 65000/=
4) வைரவிழா நிகழ்விற்கான வைரநதி சிறப்பிதழ் ரூபா 820600/= வெளியீடு செய்யப்பட்டது.
5) வைரநதி வெளியீட்டுக்காக விளம்பர நன்கொடை ரூபா 221000/= பெற்றுக்கொள்ளப்பட்டது.
6) வைரவிழா நன்கொடையாக எம்மால் ரூபா 1210028.93 சதம் சேகரிக்கப்பட்டது
7) பழைய மாணவர் ஆயுள் உறுப்பினர் சந்தாவாக ரூபா 225000/= எம்மால் சேகரிக்கப்பட்டது.
8) ஆயுள் அங்கத்தவர்களாக 450 உறுப்பினர்களை இணைத்துள்ளோம்.
9) வைரவிழா இறுதிநாள் நிகழ்வை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்தி விமர்சையாக கொண்டாடப்பட்டது.
10) வைரவிழா நினைவாக நாட்டப்பட்ட தென்னம் கன்றுகளை தொடர்ந்து பழைய மாணவர் சங்கம் பராமரித்து வருகின்றது.
11) ஆயுள் அங்கத்துவ அடையாள அட்டைகளை 450 அங்கத்தவர்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டமை
12) ஆயுள் அங்கத்தவர்களது பட்டியல் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கத்தவர் இடாப்பும் உருவாக்கி பேணப்படுகின்றது.
13) வாட்ஸப் செயலியில் 1000 பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகளை இணைத்துள்ளோம்.
14) பழைய மாணவர் சங்கத்துக்களை முகப்புத்தகம் உருவாக்கியுள்ளோம்.
15) பாடசாலைக்கான இணையதளம் ymvs.org உருவாக்கி செயற்படுத்தி வருகின்றோம்.
16) பழைய மாணவர் சங்க அலுவலகம் திறந்து வைத்து செயற்படுத்தப்படுகின்றது.
17) பாடசாலையின் கோரிக்கைக்கமைய பின்வரும் வேலைத்திட்டங்களை எமது நிதியீட்டத்தில் செயற்படுத்தி வழங்கியுள்ளோம்.
i) விளையாட்டுப் போட்டிக்கான வெற்றிக்கிண்ணம் கொள்வனவு செய்து வழங்கியமை ரூபா 52950/=
ii) ஆசிரியர் விடுதி குளியலறை திருத்தம் ரூபா 22300/=
iii) விஞ்ஞான ஆய்வுகூட திருத்தம் ரூபா 52250/=
iv) புல்லு வெட்டும் இயந்திம் கொள்வனவு ரூபா 24000/=
18) பாடசாலையில் நடைபெறும் கராத்தே வகுப்புக்கள் இணை அனுசரனையை வழங்கி வருகின்றோம்.
19) க.பொ.த சா/த மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கை ஒழுங்குபடுத்தி (2022) வளவளாளர்கள் வரவழைக்கப்பட்டு நடாத்தியிருந்தோம்.
20) பொருளாதார நிலமை காரணமாக காலை உணவை பெற்றுக்கொள்வதில் சிரமப்படும் 16 மாணவர்களுக்கான உணவை வழங்கி வருகின்றோம்.
21) நடாத்தப்பட்ட நிர்வாக கூட்டங்கள் (நேரடியானது) 11 வாட்ஸப் செயலிமூலம் 24
22) விசேட வேலைத்திட்டங்களுக்கான கலந்துரையாடல் வாட்ஸப் செயலி ஊடாக 9.00 மணி தொடக்கம் 10.00 மணிவரை தேவையின் பொருட்டு நடைபெறும்.
எதிர்கால செயற்திட்டங்கள்
1) பழைய மாணவர்சங்க யாப்பு (உபவித) உருவாக்கம் பெற்ற 09.09.2023 அன்று பொதுச்சபையின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளோம்.
2) பாடசாலை வளாகம் மற்றும் மைதானம் போன்றவற்றில் மரங்கள் நாட்டுதல் (நவம்பர்)
3) A/L மாணவர்களுக்கான (கலை, வர்த்தகம்) விசேட கருத்தரங்கை விரிவுரையாளர்கள் வரவழைத்து நடாத்தவுள்ளோம்.
4) புலம்பெயர் பழைய மாணவர்களை அங்கத்தவர்களக இணைத்து பழைய மாணவர் சங்கத்திற்கு நிலையான வருமானம் வரும் வகையில் நிதியீட்டங்களை ஏற்படுத்த தீர்மானித்துள்ளோம்.
5) பழைய மாணவர்களுக்கான தனியான WhatsApp குழுமம் உருவாக்கல்.
6) பழைய மாணவர் சங்கத்திற்கான Website உருவாக்குதல்
7) பழைய மாணவர் சங்க முகப்புத்தகத்தில் 5000 நபர்களை உள்வாங்கல்