கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாணத் தடகளப் போட்டிகளில் 18 வயதுப் பிரிவு ஆண்களிற்கான உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் எமது பாடசாலையின் விளையாட்டு வீரர் ப.அன்பழகன் 2ம் இடத்துடன் வெள்ளிப்பதக்கத்தையும், 20 வயதுப்பிரிவு பெண்களிற்கான 5000 M ஓட்ட நிகழ்ச்சியில் எமது பாடசாலையின் விளையாட்டு வீராங்கனை நி.லொரன்றினா 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவ்விரு மாணவர்களையும், இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை சமூகத்திற்கும் பாராட்டைத் தெரிவிப்பதோடு இவர்கள் தேசிய மட்டத்திலும் சாதனைகளை புரிய வாழ்த்துகின்றோம்