எமது பாடசாலையின் வரலாறு
சைவமும் தமிழும் வீரமும் தழைத் தோங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஈழத்தின் வடக்கே முல்லை மாநகரின் யாழ் – கண்டி A9 நெடுஞ்சாலையில் மாங்குளம் சந்தியில் இருந்து மேற்கே பதினாறு கிலோ மீற்றர் தூரத்தில் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் மல்லாவி என்னும் பழமை வாய்ந்த கிராமம் அமைந்து ள்ளது. காடும் காடு சார்ந்த இடங்களும், வயலும் வயல்வெளிகளும், சிறுகுளங்களும், குட்டைகளும் வரலாற்றுப் புகழ்மிக்க வன்னிவிளான்குளம் அம்மன் ஆலயமும் இடையிடையே சிறு கிராமங்களும் இருமருங்கும் காட்சியளிக்க மாங்குளம் துணுக்காய்…