
சாதாரண தர பரீட்சையில் பாடசாலை மாணவர்களின் சிறந்த பெறுபெறுகள்
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (28) நள்ளிரவு வெளியாகி இருந்தன. இதற்கமைய,…
இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு
நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..
நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தூய்மை இலங்கை வேலைத் திட்டத்தின் கீழ், கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு மற்றும் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சு ஆகிய இணைந்து, ஹதபிம அதிகார சபை ஊடாக சூழலை நேசிக்கும் உணர்வுபூர்மான தலைமுறையை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘இயற்கையான கற்றல் களம்’ கருத்திட்டத்தின் வடக்கு மாகாண ரீதியான நிகழ்வு முல்லைத்தீவு யோகபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று வியாழக்கிழமை காலை (02.10.2025) பாடசாலை அதிபர் த.பிறேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது.
Clean Sri Lanka வேலைத்திட்டம்————————————————நாட்டில் உள்ள 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கல் இலங்கையில் தேசிய மட்டத்தில் நடை பெறவுள்ள “Clean Sri Lanka” எனும் விசேட வேலைத்திட்டம் வருகிற 2025 அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளுள், வடமாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலையாக எமது மு/யோகபுரம் மகாவித்தியாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சுத்தம், பாதுகாப்பு மற்றும்…
கல்வி அமைச்சின் “Clean steps – safe space” தேசிய வேலைத்திட்டம் துணுக்காய் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்றையதினம் (9.07.2025) சிறப்பாக நடைபெற்றது. அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் ஒன்றினைந்து இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தனர். அதோடு மரம் நடுகை செயற்திட்டமும் சிறப்பாக நடைபெற்று இறுதியாக கருத்தரங்குகள் மற்றும் நாடகங்களும் இடம்பெற்று செயற்திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
2024 (2025) ஆண்டுக்கான மூன்றாம் தவணை தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் வகுப்பு ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் அதிபர்,பிரதி அதிபர், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களினால் மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
அன்புக்குரிய யோகபுரம் ம.வியின் உள்நாட்டு, வெளிநாட்டு பழைய மாணவர்களே!நம் அனைவரையும் நாம் தற்போது இருக்கும் அந்த நல்ல நிலைக்கு உரிய தாய் எமது யோகபுரம் ம.வியே ! எங்களை வளர்த்த அந்த தாயவளை நாமும் நன்றாய் பார்த்து வளர்த்திட வேண்டும்.இதற்காக நாம் ஒரு பொதுக் கூட்டம் ஒன்றினை ஒழுங்கு செய்து அதில் நாம் எல்லோரும் கலந்துரைடலாம் என பழைய மாணவர் சங்க கமிட்டி முடிவு செய்துள்ளது.ஆகவே எதிர்வரும் 15.12.2024 ஞாயிறன்று s.l .time மாலை 04.00 மணிக்கு…
ஆங்கில தினம் , தமிழ் தினம், உலக மண் தினம், விஞ்ஞான வினாடி வினா போன்ற போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கி வைக்கப்பட்டன.