2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான பாடச் செயலமர்வு 2026.10.03 சனிக்கிழமை, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.இச்செயலமர்வின் வளவாளராக முழங்காவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி சிவராணி சசிகுமார் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கினார்.மருதம் மக்கள் மன்றமானது தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இச்செயலமர்வை முன்னெடுத்து வருவதுடன், யோகபுரம் மகா வித்தியாலயம் உள்ளிட்ட மாந்தை மற்றும் துணுக்காய் கல்விக் கோட்டங்களுக்குட்பட்ட பல பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ச்சியாக உறுதுணையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
A Science workshop for students who are preparing to sit for the 2026 General Certificate of Education Ordinary Level Examination (G.C.E. O/L) was successfully conducted on Saturday, 03.10.2026, organized by Yogapuram Maha Vidyalayam with the support of Marutham Makkal Mandram.Mrs. Sivarani Sasikumar, a teacher at Mulankavil Maha Vidyalayam, participated as the resource person for the workshop and provided valuable guidance to the students.Marutham Makkal Mandram has been conducting this workshop continuously for more than four years and has been providing ongoing support for the educational development of many schools within the Manthai and Thunukkai Education Divisions, including Yogapuram Maha Vidyalayam.


