மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு

இன்றைய தினம் (16) மு/யோகபுரம் ம.வியில் நடைபெற்ற கண்ணிவெடி விழிப்புணர்வு.வெடிபொருட்களின் பாரிய பாதுகாப்பு

Read More

க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள்

நல்லாசியுடன் வாழ்த்துகிறோம்..

நாளை 29.05.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகும் க.பொ.த (சா/த) பரீட்சையில் தோற்றவுள்ள எமது பாடசாலையின் மாணவச் செல்வங்கள் பரீட்சையில் தோற்றிச் சித்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அனைவரையும் மனமார வாழ்த்துகின்றோம்.

வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

Read More

கல்விப் பட்டப்பின்படிப்பின் பின் பட்டயம் பெறும் யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்கள்.

இன்றைய தினம் (2026.09.10) பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற கல்விப் பட்டப்பின்படிப்பின் பின் பட்டயம் பெறும் யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களான திருமதி தர்மினி பிரசாத் மற்றும் திருமதி யாழினி விஜிதரன் ஆகியோருக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். Today (2026.09.10), at the Bandaranayake Memorial International Conference Hall (BMICH), we extend our heartfelt congratulations on behalf of the entire…

Read More

யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்கள்.

இன்று(2026.09.08) யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்கள், “BE THE CHANGE” செயற்றிட்டத்தின் கீழ் யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் பாலிநகர் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களிலும் சிறு விளையாட்டு சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.இதன்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்களால் முன்னெடுக்கப்படும் பல்வேறு பாடசாலை மட்ட மற்றும் சமூக மட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், அவ்வாறான செயற்பாடுகளை எமது பாடசாலை மற்றும் சமூகத்திலும் யோகபுரம் மகா வித்தியாலய…

Read More

இன்று நடைபெற்ற சிரமதானப் பணிகள்.

பாடசாலை மீள ஆரம்பிக்கப்படவுள்ளதை முன்னிட்டு, யோகபுரம் மகா வித்தியாலயத்தில் இன்று (2026.09.05) மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து சிரமதானப் பணிகளை மேற்கொண்டனர். In preparation for the reopening of the school, students and parents of Yogapuram Maha Vidyalayam joined together to carry out community service activities at the school today (05.09.2026).

Read More

விடுமுறை கால வகுப்புக்கள்.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் விடுமுறை கால வகுப்புக்கள் தரம் 10 ,தரம் 11 மற்றும் உயர்தர மாணவர்களுக்கு(2027 உயர்தர மாணவர்களுக்கு மாத்திரம்) சிறப்பாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் வருகை தந்து, பிள்ளைகளுக்கான வகுப்புகளை நடத்தி வரும் எமது ஆசிரியர்களுக்கு யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனப்பூர்வமான நன்றிகள். Holiday classes are being conducted successfully at Yogapuram Maha Vidyalayam for Grade 10, Grade 11, and Advanced Level students…

Read More

பாடசாலை வளாகத்தில் கண்காணிப்புக் கமராக்கள் மீண்டும் புதுப்பிப்பு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களான திரு. சோ. ஐங்கரன் மற்றும் திரு. பா. நிசந்தன் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடன், யோகபுரம் கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக, பாடசாலை வளாகத்தில் கண்காணிப்புக் கமராக்கள் மீண்டும் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளன.ஏற்கனவே இவர்களால் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்கள் செயலிழந்த நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, தாங்களே முன்வந்து அவற்றை மீளமைத்து, புதிய கண்காணிப்புக் கமராக்களையும் பொருத்தி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இக்கண்காணிப்பு வேலைத்திட்டத்திற்கு உதவிய எமது பழைய மாணவர்கள் இருவருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் தனது…

Read More

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம்.

சமூக விஞ்ஞானப் போட்டியில் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள மாணவன் நவநீதன் சரிஸ்ணு அவர்களுக்கும், அவரைப் பயிற்றுவித்த ஆசிரியருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம். We extend our heartfelt congratulations and appreciation, on behalf of Yogapuram Maha Vidyalayam, to Master Navaneethan Sarisnu, who secured Second Place at the Provincial Level in the Social…

Read More

காலைப் பிரார்த்தனை.

இன்று (2026.08.07), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையின் போது, எமது பாடசாலையின் பழைய மாணவியும் ஓய்வுபெற்ற விவசாயப் போதனாசிரியருமான திருமதி சிவபாலன் புவனேஸ்வரி அவர்கள் நற்சிந்தனை வழங்கினார்.அவரது உரையில், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களின் அவசியம் மற்றும் இறைநம்பிக்கையுடன் வாழ்வதன் முக்கியத்துவம் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.இன்றைய காலைப் பிரார்த்தனையில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து கலந்துகொண்டனர். Today (2026.08.07), during the morning assembly held at…

Read More

“சேவைக் கழகம்”

இன்று முதல் (2026.08.07), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் விருந்தோம்பல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “சேவைக் கழகம்” என்ற புதிய கழகம் உத்தியோகபூர்வமாகத் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. 🔹️இக்கழகத்தின் பொறுப்பாசிரியராக திருமதி தர்ஷிணி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 🔹️கழகத்திற்கான முதலாவது பயிற்சி நிகழ்வு இன்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில், எமது பாடசாலையின் பழைய மாணவியும் தற்போது விடுதி முகாமைத்துவத் (Hotel Management) துறையில் கல்வி பயிலும் மாணவியுமான செல்வி சிவச்செல்வதங்கேஸ்வரன் சங்கவி வளவாளராகக் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு…

Read More

பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக மாணவர்களுக்கும் அழகக உரிமையாளர்களுக்கும் விசேட கலந்துரையாடல்.

இன்று (2026.08.07), விடுமுறைக் காலத்திலும் அதனைத் தொடர்ந்து பாடசாலை ஆரம்பமான பின்னரும் மாணவர்களின் சிகை ஒழுங்கை பேணுவதை உறுதிப்படுத்தும் நோக்கில், யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று பாடசாலை அதிபர் திரு க.சசிகரன் தலைமையில் நடைபெற்றது.இக்கலந்துரையாடலில் துணுக்காய் மற்றும் மாந்தை அழககச் சங்கத்தின் பிரதிநிதிகள், துணுக்காய் பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பாடசாலையின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கும் மாணவத் தலைவர்களும் கலந்து கொண்டனர். Today…

Read More

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களால் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்து.

நடைபெற்றுமுடிந்த 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அனைவரும் இணைந்து, கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் மதிய விருந்து ஒன்றை 2026.08.07 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  Based on the results of the recently concluded 2025 G.C.E. Advanced Level Examination,…

Read More