யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்கள்.

இன்று(2026.09.08) யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்கள், “BE THE CHANGE” செயற்றிட்டத்தின் கீழ் யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் பாலிநகர் மகா வித்தியாலய மாணவத் தலைவர்களுடன் பயனுள்ள கலந்துரையாடல்களிலும் சிறு விளையாட்டு சார்ந்த செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர்.இதன்போது, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்களால் முன்னெடுக்கப்படும் பல்வேறு பாடசாலை மட்ட மற்றும் சமூக மட்ட செயற்பாடுகள் தொடர்பாகவும், அவ்வாறான செயற்பாடுகளை எமது பாடசாலை மற்றும் சமூகத்திலும் யோகபுரம் மகா வித்தியாலய மாணவத் தலைவர்கள் முன்னெடுப்பதன் அவசியம், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான படிமுறைகள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலின் பயனாக, எமது பாடசாலை மாணவத் தலைவர்களாலும் எதிர்காலத்தில் முதற்கட்டமாக சில பாடசாலை மட்ட மற்றும் சமூக மட்ட செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.மேலும், இந்நிகழ்வின் ஞாபகார்த்தமாக, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர்களால் யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மரக்கன்று ஒன்று நாட்டப்பட்டதோடு, பாலிநகர் மகா வித்தியாலயத்திற்கும் மரக்கன்று ஒன்று வழங்கப்பட்டது.அத்துடன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவ முதல்வர் சபையால் முன்னெடுக்கப்படும் “CHARITY WEEK” செயற்பாட்டின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையிலான புதிய புத்தகங்கள் முதற்கட்டமாக யோகபுரம் மகா வித்தியாலயம், பாலிநகர் மகா வித்தியாலயம் மற்றும் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டன.

மேலதிக புகைப்படங்களை எமது உத்தியோகபூர்வ முகநூல் தளத்தில் பார்வையிட முடியும்

//

Today(2026.09.08), the Prefects of Jaffna Hindu College visited Yogapuram Maha Vidyalayam and, under the “BE THE CHANGE” project, engaged in meaningful discussions and recreational activities with the Prefects of Yogapuram Maha Vidyalayam and Palinagar Maha Vidyalayam.During the programme, detailed discussions were held on the various school-level and community-level activities carried out by the Prefects of Jaffna Hindu College, the importance of initiating similar activities within Yogapuram Maha Vidyalayam and the wider community, and the steps required to successfully implement such initiatives by the Prefects of Yogapuram Maha Vidyalayam.As a result of these discussions, the student leaders of our school are also expected to initiate several school-level and community-level activities in the near future as the first phase of their initiatives.Furthermore, as a remembrance of this event, a sapling was planted at Yogapuram Maha Vidyalayam by the Prefects of Jaffna Hindu College, while another sapling was presented to Palinagar Maha Vidyalayam.In addition, as part of the “CHARITY WEEK” initiative conducted by the Board Of Prefects Of Jaffna Hindu College, a collection of new books beneficial to students was donated, as the first phase, to Yogapuram Maha Vidyalayam, Palinagar Maha Vidyalayam, and Yogapuram Primary School.

You can view additional photos on our official Facebook page.

மறுமொழி இடவும்