யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் தின விழாவானது, உயர்தர மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பெற்றோர்களின் நிதிப் பங்களிப்புடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களையும் இணைத்து 2026.10.08 அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்களால் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் கொடியும் யோகபுரம் ஆரம்பப் பாடசாலையின் கொடியும் ஒரே நேரத்தில் ஏற்றப்பட்டன.அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் மேலைத்தேய வாத்தியக் குழுவினரால் ஆசிரியர்கள் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து, மண்டப நிகழ்வுகள் ஆரம்பமாகின. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஆசிரியர்களுக்கான மதிய உணவும் உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலதிக புகைப்படங்களை யோகபுரம் மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.
https://www.facebook.com/share/p/1H2XNzh1XG/
https://www.facebook.com/share/p/1JL6J5Jjt1/
https://www.facebook.com/share/p/1BsiBa3tjB/
Teachers’ Day at Yogapuram Maha Vidyalayam was celebrated grandly on 08.10.2026, organized by the Advanced Level Students’ Union with financial contributions from parents, and with the participation of teachers from Yogapuram Primary School.The National Flag was hoisted by the Chief Guest, Mrs. Jayanthi Thanabalasingam, the retired principal of Kilinochchi Maha Vidyalayam. This was followed by the simultaneous hoisting of the flags of Yogapuram Maha Vidyalayam and Yogapuram Primary School.Subsequently, the teachers were escorted to the hall by the students’ Western music band, and the main event commenced. Cultural performances by students and teachers added colour to the occasion, while a special lunch for the teachers was also arranged by the Advanced Level Students’ Union.
Additional photographs can be viewed on the official Facebook page of Yogapuram Maha Vidyalayam.
https://www.facebook.com/share/p/1H2XNzh1XG/
https://www.facebook.com/share/p/1JL6J5Jjt1/
https://www.facebook.com/share/p/1BsiBa3tjB/


























