Clean Sri Lanka வேலைத்திட்டம்

Clean Sri Lanka வேலைத்திட்டம்
————————————————
நாட்டில் உள்ள 50 பாடசாலைகளில் பசுமை வலயங்களை உருவாக்கல்

இலங்கையில் தேசிய மட்டத்தில் நடை பெறவுள்ள “Clean Sri Lanka” எனும் விசேட வேலைத்திட்டம் வருகிற 2025 அக்டோபர் 02 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் தெரிவுசெய்யப்பட்ட 50 பாடசாலைகளுள், வடமாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலையாக எமது மு/யோகபுரம் மகாவித்தியாலயம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் அறிவிக்கிறோம்.

இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் சுத்தம், பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றை நடைமுறையில் கற்றுக்கொடுக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

எமது மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து செயற்படவுள்ள இந்நிகழ்வில், அனைவரின் ஆர்வமிக்க பங்கேற்பும் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுகிறது
நன்றி
பாடசாலை சமுகம்
மு/யோகபுரம் மகாவித்தியாலயம்

Leave a Reply