விஞ்ஞான பாடச் செயலமர்வு.

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விஞ்ஞான பாடச் செயலமர்வு 2026.10.03 சனிக்கிழமை, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையில் சிறப்பாக நடைபெற்றது.இச்செயலமர்வின் வளவாளராக முழங்காவில் மகா வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி சிவராணி சசிகுமார் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டல்களை வழங்கினார்.மருதம் மக்கள் மன்றமானது தொடர்ந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இச்செயலமர்வை முன்னெடுத்து வருவதுடன், யோகபுரம் மகா வித்தியாலயம் உள்ளிட்ட மாந்தை…

Read More

தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 2026.10.05 அன்று சிறப்பாக நடைபெற்றது. The certificate presentation ceremony for the students who participated in the Leadership Training Seminar conducted by the Mullaitivu District Youth Club was successfully held on 05.10.2026.

Read More

தேசிய மட்ட எல்லே போட்டியில் பங்கேற்கவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய அணிக்கான அனுசரணையை வழங்கவுள்ள யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம்.

27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள தேசிய மட்ட எல்லே போட்டியில் யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலயம் ஆகிய இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன.இப்போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணிகளுக்கான போக்குவரத்து வசதிகள் மற்றும் யோகபுரம் மகா வித்தியாலய அணிக்கான உணவு உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கான அனுசரணையை யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் ஒன்றியம் வழங்கவுள்ளது. Both Yogapuram Maha Vidyalayam and Iyangankulam Maha Vidyalayam will participate in the National-Level Elle…

Read More

ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், மாணவர்களுக்கு இடையிலான நட்புறவு எல்லே பயிற்சிப் போட்டி.

பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான நட்புறவுப் பயிற்சிப் போட்டி 24.09.2026 அன்று ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.தேசிய மட்டப் போட்டிக்கான தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சிப் போட்டியில், இரு அணிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றன.இவ்விரு அணிகளும் 27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய…

Read More

துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழாவில், யோகபுரம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள்.

இன்று (2026.09.22) இடம்பெற்ற துணுக்காய் பிரதேச செயலகத்தின் பண்பாட்டுப் பெருவிழாவில், யோகபுரம் மகா வித்தியாலய மாணவ, மாணவிகள் பங்கேற்று சிறப்பான கலைநிகழ்வொன்றை வழங்கினர். Today (2026.09.22), the students of Yogapuram Maha Vidyalayam participated in the Cultural Festival organized by the Thunukkai Divisional Secretariat and presented a special cultural

Read More

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் “ஊடகக் கழகம்” உத்தியோகபூர்வமாக ஆரம்பம்.

இன்று (2026.09.18) முதல், யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் ஊடகத்துறை சார்ந்த திறன்களை மேம்படுத்தும் நோக்கில் “ஊடகக் கழகம்” என்ற புதிய கழகம் உத்தியோகபூர்வமாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. இக்கழகத்தின் பொறுப்பாசிரியர்களாக செல்வி தருமரத்தினம் யாழினி மற்றும் திருமதி கோபி கிருஸ்ணா ஜானகி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றதுடன், அதன் ஓர் அங்கமாக முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பும் இடம்பெற்றது. பாடசாலையில் நடைபெறும் விழாக்கள், நிகழ்வுகள் மற்றும் முக்கிய செயற்பாடுகளை முறையாக ஆவணப்படுத்துதல்,…

Read More

தேசிய மட்ட எல்லே போட்டிக்கான பயிற்சிப் போட்டி.

பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான நட்புறவுப் பயிற்சிப் போட்டி 15.09.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.தேசிய மட்டப் போட்டிக்கான தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சிப் போட்டியில் இரு அணிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.இவ்விரு அணிகளும் 27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட எல்லே…

Read More

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு.

இன்றைய தினம்(2026.09.16) யோகபுரம் மகா வித்தியாலயத்தில் மாணவர் பாராளுமன்ற அமர்வு சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. துரைராஜா ரவிகரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகளை வளர்த்தல், தலைமைத்துவ ஆற்றல்களை மேம்படுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியை பொறுப்புணர்வும் சிறந்த தலைமைத்துவப் பண்புகளும் கொண்டவர்களாக உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இம்மாணவர் பாராளுமன்ற அமர்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. Today (2026.09.16), a Student Parliament session was successfully conducted at…

Read More

முல்லைத்தீவு மாவட்ட அணிக்கு 2 ஆம் இடம்.

2026 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான எல்லே போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட அணி 2ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.இவ்வணியில் யோகபுரம் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த வீராங்கனைகளான • யூ. கெனஸ்ரிகா • கு. லக்சனா • த. நிக்சனா • மோ. கௌசிகா • பி. பிரியதர்சா ஆகியோரும் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்தியமை எமது பாடசாலைக்கு பெருமைக்குரிய விடயமாகும். The Mullaitivu District Women’s Elle Team secured 2nd place at…

Read More

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனை.

வெள்ளிக்கிழமை (2026.09.11) யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற காலைப் பிரார்த்தனையில், ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் திருமதி கீதா பாலசிங்கம் அவர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு சிறப்பான நற்சிந்தனைகளை வழங்கினார்.இந்நிகழ்வில் யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன், யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களும் இணைந்து காலை பிரார்த்தனையில் கலந்துகொண்டனர். On Friday (2026.09.11), during the morning prayer held at the Main Hall of Yogapuram Maha Vidyalayam, Mrs. Geetha Balasingham,…

Read More