பாடசாலைக்கீதம்
இராகம்:- காபி தாளம் :- ஆதி வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே வாழிய யோகபுரம் மகா வித்தியாலயம் வாழிய வாழியவே வாழியவே எங்கள் மகா வித்தியாலயம் வளர்பிறை போல் வளர்ந்தெந்நாளுமே மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர் மேன்மையடைந்திட வாழியவே யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென ஓங்கி வளர்ந்திடும் வித்தியாலயம் ஏழைகள் உயர்ந்திட அரசினர் உதவிடும் இலவசக் கல்வி அளிக்குமிடம் செந்தமிழதனொடு ஆங்கில மொழியை பைந்தமிழ்ச் சிறுவர்கள் பயிலுமிடம் நம் தமிழ்க் கலைகளைநல்லாசிரியர்கள் நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம் கணித…
