பாடசாலைக்கீதம்

இராகம்:- காபி

தாளம் :- ஆதி

வாழியவே வாழியவே வாழிய வாழிய வாழியவே
வாழிய யோகபுரம் மகா வித்தியாலயம் வாழிய வாழியவே

வாழியவே எங்கள் மகா வித்தியாலயம்
வளர்பிறை போல் வளர்ந்தெந்நாளுமே
மேழி பிடித்திடும் உழவர்களின் மைந்தர்
மேன்மையடைந்திட வாழியவே

யோகபுரம் குடியேற்ற மக்களுக்கென
ஓங்கி வளர்ந்திடும் வித்தியாலயம் ஏழைகள்
உயர்ந்திட அரசினர் உதவிடும்
இலவசக் கல்வி அளிக்குமிடம்

செந்தமிழதனொடு ஆங்கில
மொழியை பைந்தமிழ்ச் சிறுவர்கள்
பயிலுமிடம் நம் தமிழ்க் கலைகளை
நல்லாசிரியர்கள் நாட்டை முன்னேற்ற பயிற்றுமிடம்

கணித விஞ்ஞான விவசாய அறிவை
கருத்துடன் போதிக்கும் வித்தியாலயம்
கைப்பணி மனையியல் பாடங்கள் எல்லாம்
அற்புதமாய் அளிக்கும் வித்தியாலயம்

காட்டுப் பகுதியில் நாட்டறிஞர்களை
காட்டிடவே எழுந்த வித்தியாலயம்
வீட்டிலும் நாட்டிலும் விடிவிளக்காக
விளங்கிடும் மாணவர் பயிலுமிடம்

அறுபத்திரண்டில் அரசினர் அளித்த
ஆரம்பப் பாடசாலை வளர்ந்தின்று
உயர்ந்திடும் மாகவித்தியாலயமாகி உன்னத நிலையை அடைந்ததுவே

வாழியவே வாழியவே

Leave a Reply