பாடசாலையின் பழைய மாணவர் சங்கம்

இலங்கை பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. பாடசாலைகளின் கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்கு கொண்டு பல மாற்றங்களை ஏற்படுத்த பழைய மாணவர் சங்கம் நிறைய பங்காற்ற முடியும் . இதன் தலைவர் பதவி வழியாக பாடசாலையின் அதிபராவார்.

யோகபுரம் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கமும் மிக நீண்ட வரலாற்றினை கொண்டது ஆயினும் இடப்பெயர்வின் பின்னர் 2022 ஆம் ஆண்டு காலம் வரையில் அது கவனிப்பாரற்று அதன் செயல்பாடுகள் ஸ்தம்பித்த நிலைக்கு தள்ளப்பட்டது . பின்னர் அதற்கு மீளவும் புத்துயிர் வழங்கப்பட்டு செயல்படும் வகையில் சங்கத்தின் பொதுக்கூட்டமும் நிர்வாகத் தெரிவும் 2022 03. 14 ஆம் தேதி இடம்பெற்றது .புதிதாக வங்கியில் கணக்கு ஆரம்பித்து புதிதாக ஒரு அமைப்பு உருவாக்கப்படுவது எப்படியோ அப்படியே அனைத்து செயல்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டி இருந்தது.பாடசாலை தற்போது இருக்கும் நிலையிலிருந்து மிக வேகமாக அதனை அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்காக பல்வேறு வகையில் கவனம் செலுத்தி நிர்வாகத்தினர் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தனர்.

பாடசாலையின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வதியும் பழைய மாணவர்களிடம் தொடர்பு கொண்டு கதைக்கப்பட்டிருந்தது அந்த வகையில் கனடாவில் வதியும் திரு சிவானந்தன் தயாபரன் அவர்கள் வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர்களை ஒன்று திரட்டி அவர்களின் நிதிப் பங்களிப்புடன் பாடசாலையில் காணப்பட்ட 45 க்கும் மேற்பட்ட வேலை திட்டங்கள் கிட்டத்தட்ட 40 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையில் ஒன்றரை மாதங்களுக்குள் செய்யப்பட்டு பாடசாலையின் பௌதிக வளரீதியான தேவைகள் நிறைவு செய்யப்பட்டமையானது பாடசாலையின் வரலாற்றில் பெரும் மைல்கல்லாக அமைந்து காணப்பட்டது. இந்த காலப்பகுதியில் தான் பாடசாலையின் வைரவிழாவினையும் கொண்டாட தீர்மானிக்கப்பட்டிருந்தது. கடந்த 01.06. 2022 வைரவிழா காலமாயினும் அது கடந்த 01.03. 2023 இல் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன் தற்போது பாடசாலைக்கான இணையதளம் ,ஆயிரம் அங்கத்தவர்களை கொண்ட வாட்ஸ் அப் குரூப் (whatsup group) ,450 பேர் சங்கத்தில் நிரந்தர அங்கத்தவர்களாக இணைக்கப்பட்டமை , அவர்களுக்கான அங்கத்துவ அடையாள அட்டை(membership card) வழங்குவதற்கான ஏற்பாடுகள் , பழைய மாணவர் சங்கத்திற்கான அலுவலகம் ஒன்று புனரமைக்கப்பட்டு வழங்கப்பட்டமை, புல் வெட்டும் இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டமை, கராத்தே வகுப்புக்கு இணை அனுசரணை வழங்குதல் , பழைய மாணவர்கள் சங்கத்திற்கான யாப்பு உருவாக்கம் ,வைர விழா காலப்பகுதியில் நாட்டப்பட்ட 300 தென்னங்கன்றுகள் பராமரிப்பு ,விஞ்ஞான ஆய்வு கூட திருத்தம் ,போன்ற பல்வேறு வகையான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் அடைவு மட்டங்களை உயர்த்துவதில் கூடிய கவனம் செலுத்துவதற்கு பழைய மாணவர் சங்கம் திட்டமிட்டுள்ளது.

அத்துடன் உயர்தர மாணவர்கள் 2023 செயற்திட்டம் ஊடாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரை கடமையாற்றிய அதிபர்களின் புகைப்படவிபரங்கள் அலுவலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆகவே எமது பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் எதிர்காலத்தில் நிறையவே வளர்ந்து பாடசாலை சேவையாற்றும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

Leave a Reply