கீழ்வரிசையின் வலமிருந்து இடமாக திருமதி.இ.மகாலிங்கம் (பெற்றோர்), திருமதி.செ.கருணாநிதி (ஆசிரியர்), திருமதி.சு.ரஞ்சன் (ஆசிரியர்),திரு.த.பிறெமச்சந்திரன் (அதிபர்), திரு.தி.கிரிதரன் (ஆசிரியர்), திருமதி.பு.யோகானந்தராஜா (ஆசிரியர்), திருமதி.ஜெ.ஞானேஸ்வரன் (பெற்றோர்), மேல்வரிசையின் வலமிருந்து இடமாக செல்வி.ச.சரணியா (பழைய மாணவி),திரு.இ.கிருபாகரன் (பழைய மாணவன்), திரு.சு.சுபநேசன் (ஆசிரியர்), திரு.கிரிதரன் (பெற்றோர்), திரு.த.பிறோமானந்தன் (பெற்றோர்), திருமதி.ச.உதயகுமார் (ஆசிரியர்).
இலவசக் கல்வியின் பயனாக பண்புசார் தரம்மிக்க கல்விக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பதற்கான தேசிய கல்விக் கொள்கை சட்டகத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் தீர்மானங்களை எடுப்பதற்காக பாடசாலைகள் மேலும் பலப்படுத்தவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய கல்வியின் நோக்கங்களை அடைவதற்காக அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட முழு பாடசாலை சமூகத்தினரையும் பங்கேற்க செய்தல் வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை கொண்ட முகாமைத்துவத்துடனான வினைத்திறன் மிக்க பாடசாலை முறைமையை ஸ்தாபிப்பது கட்டாய தேவையாகும். பாடசாலைகளுக்கு வளங்கப்பட்டுள்ள செலவு எல்லைகளை மேலும் அதிகரிக்கப்பட்டு பாடசாலை செயற்பாடுகள் மிகவும் நடைமுறை சாத்தியமானதாகவும் வெளிப்படைத்தனமையானதாகவும் செயற்திறன் மிக்கதாகவும் துல்லியமாகவும் செயற்படுவதனூடாக வளப்பயன்பாடு உறுதிப்படுத்தப்படும் நோக்கோடு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு ஸ்தாபிக்கப்படுகின்றது.
பாடசாலை அபிவிருத்திக்குழுவானது தகவல்கள் விபரங்களின் அடிப்படையில் தீர்மானங்களை எடுத்து திட்டமிட்டு அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் பாடசாலையின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமையளிப்பனவாகவும் வளங்களை உச்ச பயன்பாட்டை அடைவனவாகவும் பாடசாலை முகாமைத்துவத்தின் மூலம் சுயதீர்மானங்களை எடுப்பதற்கான நிரவாக, முகாமைத்துவ, நிதி ரீதியான அதிகாரத்தை பாடசாலைக்கு வழங்குவனவாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நெகிழ்வுத்தன்மையான பொறுப்புக்கூறுவனவாகவும் பாடசாலைக்கும் சமூகத்துக்குமிடையில் நல்லுறவினை பேணுவனவாகவும் அமைதல் வேண்டும்.
அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவானது தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்கக்கூடிய அமைப்புக் குழுவாகக் காணப்படுகின்றது. இக்குழுவில் பாடசாலை அதிபர், ஆசிரிய பிரதிநிதிகள், பெற்றோரது சார்பிலான பிரதிநிதிகள், பழைய மாணவர் சார்பிலான பிரதிநிதிகள், மற்றும் வலயக்கல்வி காரியாலயத்தின் பிரதிநிதி ஒருவர் ஆகிய உறுப்பினர்கள் உள்ளடங்கியிருக்கவேண்டும் அதன்படி குழுவின் தலைவராக அதிபர் திரு.த.பிறேமச்சந்திரன், ஆசிரியர் குழுவின் அங்கத்தவர்களாக ஆசிரியர் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைய வேண்டும். அதன்படி திருமதி.க.செல்வகலா, திருமதி.சு.ரஞ்சன், திரு.தி.கிரிதரன், திருமதி.பு.யோகானந்தராசா, திரு.சு.சுபநேசன், திருமதி.ச.உதயகுமார் ஆகிய ஜந்து பேர் எமது பாடசாலையில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
பெற்றோர் பிரதிநிதியாக மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப எமது பாடசாலையில் 4 பேர் அங்கம் வகிக்கவேண்டும் அதன்படி திருமதி.இ.மகாலிங்கம், திருமதி.ஜெ.ஞானேஸ்வரன், திரு.த.பிறேமானந்தன், திரு.கிரிதரன் ஆகியோர் எமது பாடசாலையில் அங்கத்துவம் வகிக்கின்றனர். பெற்றோர் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்படுபவர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க பொதுக் கூட்டத்தின் போது மாணவர்களின் பெற்றோரால் தெரிவு செய்யப்பட்டவர்களாக காணப்படுவர். இவ் அங்கத்துவமானது ஆரம்பப்பிரிவு இடைநிலைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், எச்சந்தர்ப்பத்திலும் பழைய மாணவர் அல்லாத பெற்றோரை உறுப்பினராக நியமிக்க வேண்டும்.
பழைய மாணவர் உறுப்பினராக இரண்டு பேர் தெரிவுசெய்யப்படுவர். அதன்படி எமது பாடசாலையின் பழைய மாணவர்களாக செல்வி.ச.சரணியா, திரு.இ.கிருபாகரன் ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றனர். வலயக்கல்வி காரியாலயத்தின் பிரதிநிதியாக திரு.ச.பிரதீவானந்த் அவர்களும் காணப்படுகின்றனர்.
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழுவின் பதவிகள் அடிப்படையில் தலைவராக பாடசாலையின் முதல்வரும் செயலாளராக பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பெரும்பான்மை விருப்பின் பேரில் பெற்றோரில் ஒருவரும் பொருளாளராக ஆசிரியரில் ஒருவரும் தெரிவுசெய்யப்படுவர். இக்குழுவினுடைய அங்கத்தவர்களது சேவைக்காலமாக 2 வருடங்கள் காணப்படுவதுடன்இ அதிபர், வலயக்கல்வி அலுவலக பிரதிநிதி தவிர்ந்த ஏனைய பதவிகளுக்கு நியமனம் பெறும் உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கால எல்லை 2தடவைகள் அண்ணளவாக 4 வருடங்களைவிட மேற்படாதிருக்கவேண்டும்.
இப்பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திக்குழுவானது பாடசாலையினுடைய இலக்குகளை அடைந்துகொள்வதற்கான வருடாந்த அமுலாக்கல் திட்டங்களை தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும்
