இன்றைய தினம் அதிபர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தற்போது தரம் 09ல் கல்வி கற்பவர்கள் தரம் 10 ல் 3 தொகுதிகளிலும் எந்தெந்தப் பாடங்களைத் தெரிவுசெய்தால் எவ்வாறான துறைகளுக்கு செல்ல முடியும் என்பது தொடர்பாக எமது வித்தியாலய ஆசிரியர் திருமதி ச.தர்சினி அவர்கள் விளக்கம் அளித்தார்.
மேலும் இது தொடர்பான தரம் 09 மாணவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நாளை பி.ப 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் திரு தி.கிரிதரன், வகுப்பாசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






