தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக, துணுக்காய் கல்வி வலயத்தினால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சை இன்று (2026.07.30), யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரீட்சை, யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மாணவர்களை பரீட்சை மண்டபச் சூழலுக்கு பழக்கப்படுத்துவதும், புதிய மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் பரீட்சை எழுதும் போது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பதட்டத்தை குறைப்பதும் இதன் பிரதான நோக்கங்களாகும்.
The final mock examination organized by the Thunukkai Education Zone for Grade 5 Scholarship Examination candidates was held today (2026.07.30) in the Main Hall of Yogapuram Maha Vidyalayam for the students of Yogapuram Primary School.The examination was conducted under the supervision of the teachers of Yogapuram Maha Vidyalayam. Its primary objectives were to familiarize students with the examination hall environment ahead of the upcoming Grade 5 Scholarship Examination and to reduce the anxiety they may experience when sitting for the examination under the supervision of unfamiliar invigilators.

