தேசிய மட்ட எல்லே போட்டிக்கான பயிற்சிப் போட்டி.

பாடசாலைகளுக்கு இடையிலான எல்லே போட்டியில் வெற்றி பெற்று, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ள யோகபுரம் மகா வித்தியாலயம் மற்றும் ஐயங்கன்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு இடையிலான நட்புறவுப் பயிற்சிப் போட்டி 15.09.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டில், பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.தேசிய மட்டப் போட்டிக்கான தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இப்பயிற்சிப் போட்டியில் இரு அணிகளும் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் பங்கேற்றனர்.இவ்விரு அணிகளும் 27.09.2026 அன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெறவுள்ள பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட எல்லே போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்கவுள்ள இரு அணிகளுக்கும் எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

A friendly practice match between the students of Yogapuram Maha Vidiyalayam and Iyankankulam Maha Vidiyalayam, who have qualified for the national-level competition after emerging victorious in the inter-school Elle competition, was successfully held on 15.09.2026 at the Yogapuram Maha Vidiyalayam playground, organized by Yogapuram Maha Vidiyalayam.The practice match was conducted with the aim of enhancing the skills and preparedness of both teams for the upcoming national-level competition. Both teams participated with great enthusiasm and sporting spirit.Both teams will participate in the National-Level Inter-School Elle Championship, which is scheduled to be held on 27.09.2026 in Embilipitiya.We extend our heartfelt best wishes, on behalf of the entire school community, to both teams as they prepare to participate in the national-level competition.

மறுமொழி இடவும்