யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டிலும்,மருதம் AGROTECH நிறுவனத்தின் அனுசரணையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு 2026.08.01 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பிரதி அதிபரும் யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான திரு. சத்தியரூபன் அவர்களும், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர் திரு. மதுரன் அவர்களும் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயம், பொன்னகர் தமிழ் வித்தியாலயம், வன்னிவிளாங்குளம் அ.த.க. பாடசாலை, விநாயகபுரம் அ.த.க. பாடசாலை, மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை, பாண்டியன்குளம் ஆரம்பப் பாடசாலை மற்றும் குமாரசாமி வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 5 மாணவர்கள் பங்கேற்றனர்.
A special seminar for students preparing for the Grade 5 Scholarship Examination was successfully held on 1 August 2026 at the Main Hall of Yogapuram Maha Vidyalayam. The programme was organized by Yogapuram Maha Vidyalayam with the generous sponsorship of MARUTHAM AGROTECH.The resource persons for the seminar were Mr. Saththiyaruban, Deputy Principal of Kokkuvil Hindu Primary School and an alumnus of Yogapuram Maha Vidyalayam, and Mr. Madhuran,teacher at Jaffna Hindu Primary School.The seminar was attended by Grade 5 students from Yogapuram Primary School, Anninchiyankulam Tamil Vidyalayam, Ponnagar Tamil Vidyalayam, Vannivilankulam G.T.M. School, Vinayagapuram G.T.M. School, Moonrumurippu G.T.M. School, Pandiyankulam Primary School, and Kumarasamy Vidyalayam.





