புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் கலந்துரையாடலும்

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் கோரிக்கையை ஏற்று, தேசிய சேமிப்பு வங்கியினரால் (NSB) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து மீட்டற் கலந்துரையாடலும் வளவாளரான திரு J.J பேர்னார்ட் (யா/தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி – ஆசிரியர்) அவர்களால் 2026.07.11 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயம், பாண்டியன்குளம் ஆரம்பப் பாடசாலை, மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம், மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை,குமாரசாமி வித்தியாலயம் மற்றும் வன்னிவிளாங்குளம் அ.த.க. பாடசாலை ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும், அவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் வைபவமும் இதன் போது இடம்பெற்றது.

At the request of Yogapuram Maha Vidyalayam, the National Savings Bank (NSB) organized a Grade 5 Scholarship Model Examination followed by a review and discussion session for students preparing for the Grade 5 Scholarship Examination. The programme was successfully held on 11 July 2026 at the Main Hall of Yogapuram Maha Vidyalayam.The resource person for the programme was Mr. J. J. Bernard, a teacher from Tellippalai Mahajana College, Jaffna, who provided valuable guidance and explanations to the participating students.Approximately 200 students from Yogapuram Primary School, Anninchiyankulam Tamil Vidyalayam, Pandiyankulam Primary School, Mayilvaganam Tamil Vidyalayam, Moondrumurippu G.T.M. School, Kumarasamy Vidyalayam and Vannivilankulam G.T.M. School participated in the programme.The event also included a felicitation ceremony to honour students who successfully passed the Grade 5 Scholarship Examination during the past two years. Certificates and awards were presented to recognize their outstanding achievements.

மறுமொழி இடவும்