NEWS & EVENTS
தொகுதிப் பாடங்கள் தெரிவு தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல்.
இன்று (2026.07.31) யோகபுரம் மகா வித்தியாலயத்தில், தரம் 09 மாணவர்கள் தரம் 10 இற்கு முன்னேறும்போது தெரிவு செய்ய வேண்டிய தொகுதிப் பாடங்கள் தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல், தரம் 09 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் கலந்து கொண்டார். Today (2026.07.31), a guidance discussion on the selection of basket subjects for Grade 9 students progressing to…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக, வடமாகாணக் கல்வித் திணைக்களத்தால் நடத்தப்படும் இறுதிப் பரீட்சை இன்று (2026.07.30), யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இப்பரீட்சை, யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்தப்பட்டது. எதிர்வரும் புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, மாணவர்களை பரீட்சை மண்டபச் சூழலுக்கு பழக்கப்படுத்துவதும், புதிய மேற்பார்வையாளர்களின் முன்னிலையில் பரீட்சை எழுதும் போது மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பதட்டத்தை குறைப்பதும் இதன் பிரதான நோக்கங்களாகும். The final mock…
கடந்தகால வினாத்தாள் புத்தகங்கள் அன்பளிப்பு.
யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவர், கடந்தகால வினாத்தாள்ப் புத்தகங்களை இன்று (2026.07.30) உயர்தர மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு உதவியாக அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.இவ்வாறான பெறுமதியான பங்களிப்பை வழங்கிய மாணவருக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த அவரது பெற்றோருக்கும் யோகபுரம் மகா வித்தியாலயம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். A Grade 10 student of Yogapuram Maha Vidyalayam generously donated a collection of past examination papers…
பெற்றோருடனான கலந்துரையாடல்
இன்று (2026.07.30), இரண்டாம் தவணைப் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, தரம் 10 மற்றும் 11 மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களது பெற்றோருடனான கலந்துரையாடல் நடைபெற்றது. Today (2026.07.30), a discussion was held with the parents of Grade 10 and Grade 11 students based on the results of the Second Term Examination, with the objective of improving the students’ academic achievement…
சத்தியப் பிரமாண நிகழ்வு
நேர்மை வாரத்தை முன்னிட்டு, யோகபுரம் மகா வித்தியாலய ஆசிரியர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (2026.07.28) நடைபெற்றது. As part of Integrity Week, the oath-taking ceremony for the teachers of Yogapuram Maha Vidyalayam was held today (28 July 2026).
யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள்.
யோகபுரம் மகா வித்தியாலயத்திற்கு இன்று (2026.07.27) வருகை தந்த உலக வங்கிப் பிரதிநிதிகள், மாகாணக் கல்வி மற்றும் வலயக் கல்விப் பிரதிநிதிகள், எமது பாடசாலையில் முன்னெடுக்கப்படும் பாடசாலை மட்ட ஆசிரியர் தொழில்வாண்மை விருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாணவர்களின் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களின் கற்றல் மேம்பாடு தொடர்பான செயற்பாடுகளைப் பார்வையிட்டனர். World Bank representatives, along with provincial education and zonal education representatives, who visited Yogapuram Maha Vidyalayam today (2026.07.27), observed…
சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல்.
மாணவர்களின் சிகை திருத்தும் முறை மற்றும் பாடசாலை ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக சிகையைச் சீரமைத்தல் தொடர்பாக, இன்றைய தினம்(2026.07.26) எமது வேண்டுகோளின் பேரில் முல்லை மாவட்ட அழகக சங்கமும், துணுக்காய் பிரதேச சபையும் இணைந்து ஒழுங்கமைத்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. A special discussion on students’ haircut standards and maintaining hairstyles in accordance with school disciplinary regulations was held today (2026.07.26). The meeting was organised jointly by…
உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல்.
2026.07.23 (வியாழக்கிழமை) நடைபெற்ற உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடலின் சில பதிவுகள். A few highlights from the Advanced Level students’ gathering held on Thursday, 23 July 2026.
பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன் சிரமதானப் பணி.
யோகபுரம் மகா வித்தியாலயத்தின் அனைத்து மாணவர்களும் தங்களது பாடசாலையைத் தூய்மையாகவும் அழகாகவும் பராமரிக்கும் நோக்கத்துடன், 2026.07.22 அன்று (புதன்கிழமை) ஒன்றிணைந்து சிரமதானப் பணியில் ஈடுபட்டனர். All the students of Yogapuram Maha Vidyalayam participated together in a voluntary community service (Shramadana) programme on Wednesday, 22 July 2026, with the aim of keeping their school clean and well-maintained.
உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல்
நாளை (2026.07.23), உயர்தர மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. An Advanced Level (A/L) Students’ Gathering will be held tomorrow(23 July 2026).
