NEWS & EVENTS
ஆடிப்பிறப்பு தினக் கொண்டாட்டம்.
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான ஆடிப்பிறப்பு தினமான இன்று (2026.07.17) , யோகபுரம் மகா வித்தியாலயத்தின் இந்துமாமன்றத்தின் ஒழுங்குபடுத்துதலில் ஆசிரியர்களால் ஆடிக்கூழ் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. To mark Aadi Pirappu, one of the traditional festivals of the Tamil people, the Hindu Society of Yogapuram Maha Vidyalayam organized the preparation of the traditional Aadi Koozh on today (2026.07.17). The Aadi Koozh was prepared by…
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் கலந்துரையாடலும்
யோகபுரம் மகா வித்தியாலயத்தின் கோரிக்கையை ஏற்று, தேசிய சேமிப்பு வங்கியினரால் (NSB) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சையும் அதனைத் தொடர்ந்து மீட்டற் கலந்துரையாடலும் வளவாளரான திரு J.J பேர்னார்ட் (யா/தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி – ஆசிரியர்) அவர்களால் 2026.07.11 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ் வித்தியாலயம், பாண்டியன்குளம் ஆரம்பப் பாடசாலை, மயில்வாகனம் தமிழ் வித்தியாலயம், மூன்றுமுறிப்பு அ.த.க. பாடசாலை,குமாரசாமி…
வழிகாட்டல் செயலமர்வு
யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஒழுங்குபடுத்துதலில் மருதம் மக்கள் மன்றத்தின் அனுசரணையுடன் 2026 உயர்தர பரீட்சையில் வரலாறு பாடத்தில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு 2026.07.09 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இவ்வழிகாட்டல் செயலமர்வின் வளவாளராக யாழ் பிரபல ஆசிரியர் பத்மன் அவர்கள் கலந்து கொண்டார். யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுடன் மல்லாவி மத்திய கல்லூரி,பாலிநகர் மகா வித்தியாலய மாணவர்களும் கலந்து கொண்டனர். A guidance workshop for students appearing for the History subject in the Advanced Level…
பாட தெரிவுக் கலந்துரையாடல்
30.06.2026 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற உயர்தரத்தில் பாட தெரிவு, Z- score கணித்தல்,கணித விஞ்ஞான பாடங்களை கற்பதால் கிடைக்கக் கூடிய பல்கலைக்கழக வாய்ப்புகள் தொடர்பாக மிக சிறப்பான கலந்துரையாடல் நடைபெற்றதுஇக் கலந்துரையாடலை யாழ் பல்கலைக்கழக கல்வியியல்துறை விரிவுரையாளர் திரு சர்வேஸ்வரா அவர்கள் நிகழ்த்தினார் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
வழிகாட்டல் செயலமர்வு
தரம்5 மாணவர்களுக்கானவழிகாட்டல் செயலமர்வும் மாதிரி பரீட்சையும்யாழ் பிரபல வளவாளர்களால்29.06.2026. காலை 8.00 மணிக்குஎமது பாடசாலை பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட எமது பாடசாலையின் ஊட்டல் பாடசாலை மாணவர்கள் அனைவரும் பயன் பெற்றுள்ளனர்.
பாரளுமன்ற உறுப்பினர் வருகை
இன்று (23.06.2026) எமது பாடசாலைக்கு வருகை தந்த பாரளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் அவர்கள் எமது மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி வேலை திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்1.மைதான பின் பக்க மதில் வேலை 2.மைதானத்தில் மாணவர்களுக்கான washroom வசதிகள் போன்ற வேலைகளை நிறைவு செய்ய உறுதி அளித்தார்இவருடன் துணுக்காய் பிரதேச செயலர்,தொழில் நுட்ப உத்தியோகத்தர் , NPP (National People’s Power)பிரதேச உறுப்பினர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
உள ஆற்றுப்படுத்தல் கலந்துரையாடல்
தரம் 11 மாணவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் கலந்துரையாடல்
கிளாரட் சிறுவர் கழக ஆதரவுடன் 2026 சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட இக் கலந்துரையாடல் மாணவர்களை தமது திறமைகளை அறியவும் அவர்களின் ஆளுமையை வளர்க்கவும் பெரிதும் உதவியாக அமைந்தது
எமது வேண்டுகோளை ஏற்று இவ்வாறான ஏற்பாட்டை செய்து உதவிய கிளாரட் சிறுவர் கழகத்துக்கு எமது மனப்பூர்வமாக நன்றிகள்
பாடசாலையின் தேர்ச்சிஅறிக்கை வழங்கும் நிகழ்வும் பெற்றார் ஆசிரியர் சந்திப்பும்
2024 (2025) ஆண்டுக்கான மூன்றாம் தவணை தேர்ச்சி அறிக்கை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் வகுப்பு ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகள் அதிபர்,பிரதி அதிபர், உப அதிபர்கள், பகுதித்தலைவர்கள் மற்றும் வகுப்பாசிரியர்களினால் மாணவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது
