தரம் 09 மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான கலந்துரையாடல்.
இன்றைய தினம் அதிபர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தற்போது தரம் 09ல் கல்வி கற்பவர்கள் தரம் 10 ல் 3 தொகுதிகளிலும் எந்தெந்தப் பாடங்களைத் தெரிவுசெய்தால் எவ்வாறான துறைகளுக்கு செல்ல முடியும் என்பது தொடர்பாக எமது வித்தியாலய ஆசிரியர் திருமதி ச.தர்சினி அவர்கள் விளக்கம் அளித்தார். மேலும் இது தொடர்பான தரம் 09 மாணவர்களின் பெற்றோர்களுக்கான கலந்துரையாடல் நாளை பி.ப 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பிரதி அதிபர் திரு தி.கிரிதரன்,…
உயர்தர மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட செயலமர்வு (23,24/09/2023)
இன்றைய தினம் எமது பாடசாலையில் ஆரம்பமான உயர்தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு…. துணுக்காய் பாண்டியன்குளம் கோட்டப் பாடசாலைகளை ஒன்றிணைத்து நடைபெறும் விசேட செயலமர்வுக்கான நிதி அனுசரணையினை மு/யோகபுரம் ம.வி, மு/மல்லாவி மத்திய கல்லூரி, மு/பாலிநகர் ம.வி, மு/பாண்டியன்குளம் ம.வி ஆகிய பாடசாலைகளில் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாகாண மட்ட தமிழ் தினப்போட்டியில் இரண்டாம் நிலை
16.09.2023 மாகாண மட்ட தமிழ் தினப்போட்டியில்… தமிழறிவு வினாடிவினாப் போட்டியில் எமது வித்தியாலய அணி இரண்டாம் நிலையினைப் பெற்றுக்கொண்டது….. இம்மாணவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறோம்.. வழிப்படுத்திய ஆசியர்களுக்கும், நெறிப்படுத்திய அதிபர் அவர்களுக்கும், உறுதுணையாக இருந்த வலயக்கல்விப் பணிமனையின் துறைசார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி
பெற்றோர்களுக்கான விசேட கலந்துரையாடல்
இன்றைய தினம் பாடசாலையின் கல்வி அபிவிருத்தி மற்றும் இணைபாடவிதான செயற்பாடுகள் தொடர்பான பெற்றோர் கலந்துரையாடல் சிறப்புற நடைபெற்றது. அதிபர் திரு த.பிறேமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் துணுக்காய் கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் பாடசாலையின் அபிவிருத்தி இணைப்பாளருமாகிய திரு சா.பிரதீவானந் அவர்களும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் திரு ச.கிரிதரன், பிரதி அதிபர்கள், மற்றும் புலம்பெயர்ந்த பழையமாணவர்களின் பிரதிநிதிகள் உள்நாட்டு பழையமாணவர்கள் (Zoom செயலி ஊடாக) பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடமாகாண கரம் போட்டி – 2023
2003.07.25, 26 திகதிகளில் நடைபெற்ற மாகாண மட்ட பாடசாலைகளுக்கிடையிலான கரம் [ Carrom] போட்டியில் மிகவும் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதி 1 வது போட்டில் யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரியையும் 2 வது போட்டியில் யா / மானிப்பாய் இந்து மகளிர் கல்லூரியையும் காலிறுதி போட்டியில் கிளி / செண் திரேசாவையும் அரையிறுதியில் வ/ வீரபுரம் மகா வித்தியாலத்தையும் வெற்றி கொண்டு சரியான போட்டியின் மத்தியிலும் எமது பாடசாலையின் 20 வயது பெண்கள் கரம் அணியினரான அ.அதிநிலா,…
வடமாகாண தடகளப் போட்டி – 2023
கடந்த வாரம் நடைபெற்ற வடமாகாணத் தடகளப் போட்டிகளில் 18 வயதுப் பிரிவு ஆண்களிற்கான உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் எமது பாடசாலையின் விளையாட்டு வீரர் ப.அன்பழகன் 2ம் இடத்துடன் வெள்ளிப்பதக்கத்தையும், 20 வயதுப்பிரிவு பெண்களிற்கான 5000 M ஓட்ட நிகழ்ச்சியில் எமது பாடசாலையின் விளையாட்டு வீராங்கனை நி.லொரன்றினா 4 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். இவ்விரு மாணவர்களையும், இவர்களது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த மு/யோகபுரம் மகாவித்தியாலயத்தின் பாடசாலை சமூகத்திற்கும் பாராட்டைத் தெரிவிப்பதோடு இவர்கள் தேசிய மட்டத்திலும் சாதனைகளை புரிய வாழ்த்துகின்றோம்
உயர் தர பரீட்சை இல் மாணவர்கள் சாதனை
கடந்த கிழமை உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியானமை யாவரும் அறிந்ததே.எமது பாடசாலையில் கலைப்பிரிவில் 03மாணவர்கள்3A சித்திகளையும் 01 மாணவர் 2A,B சித்தி களையும் பெற்றமை சிறப்பம்சங்கள் ஆகும்.2010ம் ஆண்டின் பின்னர் கிடைத்த சிறந்த பெறுபேறு இதுவாகும்.2017ல் இரு கணித வர்த்தக பிரிவு மாணவர்கள் 3A சித்தி களை பெற்றிருந்தனர்.10 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
துணுக்காய் வலய க. பொ. த(உ / த )மாணவர்களுக்கான செயலமர்வு
எமது பாடசாலையில் கடந்த 02,03.2023 ( சனி ஞாயிறு) தினங்களில் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர்தர கலை வர்த்தக பிரிவு மாணவர்களுக்குகணக்கியல்வணிகவியல்தமிழ்புவியியல்போன்ற பாடங்கள் யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் ஆன திரு.t.வேல்நம்பி தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களானதிரு.n.பிரதீபராஜாதிரு.c.உமாகாந்திரு.a. அஜந்தகுமார்திரு..ரமணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அத்துடன் 181 மாணவர்கள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள்பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.இச்செயலமர்வு மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்றது.செயலமர்வின் இறுதியில் மாணவர்கள் கருத்துக்கள் வழங்கும் போது மிகவும் பயன்பாடு உடையதாக இருந்தது என…
பழைய மாணவர் சங்கம் செயற்பாட்டறிக்கை
மு/யோகபுரம் மகா வித்தியாலயம்பழைய மாணவர் சங்கம்செயற்பாட்டறிக்கை16.01.2023 – 31.08.20231) வைரவிழா அபிவிருத்தி வேலை திட்டத்திற்காக வருவிக்கப்பட்ட மொத்த நிதி – 27512800/= (10757310 – 16455490)2) பாடசாலை வரலாற்றின் முதன்முதலாக பாடசாலை சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட் வெளியீடு செய்யப்பட்டது 679780/=3) பாடசாலை தொடர்பான பாடல் இறுவட்டு வெளியீடு செய்யப்பட்டது – 65000/=4) வைரவிழா நிகழ்விற்கான வைரநதி சிறப்பிதழ் ரூபா 820600/= வெளியீடு செய்யப்பட்டது.5) வைரநதி வெளியீட்டுக்காக விளம்பர நன்கொடை ரூபா 221000/= பெற்றுக்கொள்ளப்பட்டது.6) வைரவிழா நன்கொடையாக எம்மால்…
