Yogapuram Maha Vidyalayam

Leading Tamil School In Mallavi

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களால் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மதிய விருந்து.

நடைபெற்றுமுடிந்த 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் அனைவரும் இணைந்து, கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வகையில் மதிய விருந்து ஒன்றை 2026.08.07 அன்று ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களின் பெற்றோர்களும், பாடசாலையின் முன்னாள் அதிபர் திரு. பிரேமச்சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.  Based on the results of the recently concluded 2025 G.C.E. Advanced Level Examination,…

Read More

தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்காக வரலாறுப் பாடத்திற்கான விசேட செயலமர்வு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தில் 2026.08.06 அன்று தரம் 10 மற்றும் தரம் 11 மாணவர்களுக்காக வரலாறு பாடத்திற்கான விசேட செயலமர்வு நடைபெற்றது.இந்நிகழ்வின் வளவாளராக இலங்கையில் தமிழ்மொழி மூல வரலாற்றுப் பாட வளவாளர்களில் ஒருவரான நித்தியவிநோதினி அவர்கள் கலந்து கொண்டார்.இச்செயலமர்வில், வரலாறுப் பாட வினாத்தாளின் மாதிரி அமைப்பு, வினாக்களுக்குப் புள்ளியிடும் முறை, வரைபடங்களில் இடங்களைக் குறித்தல் தொடர்பான நடைமுறை வழிகாட்டல்கள் என்பன விரிவாக விளக்கப்பட்டன. A special History workshop for Grade 10 and Grade 11…

Read More

சிதம்பரா கணிதப் போட்டியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு.

இன்று (2026.08.05), யோகபுரம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற காலை ஒன்றுகூடலின் போது, சிதம்பரா கணிதப் போட்டியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். Today (2026.08.05), during the morning assembly held at Yogapuram Maha Vidyalayam, students who achieved outstanding results and emerged as winners in the Chidambara Mathematics Competition were honoured in recognition of their excellent performance.

Read More

சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல் கருத்தமர்வு.

இன்று (2026.08.04), யோகபுரம் மகா வித்தியாலயத்தில், மாணவர்களை சுற்றுச்சூழல் நேயமிக்கவர்களாக உருவாக்கும் நோக்கில் சுற்றாடல் அதிகார சபையால் நடத்தப்படும் சுற்றாடல் முன்னோடிப் பதக்கங்களைப் பெறுவதற்கான வழிகாட்டல் கருத்தமர்வு தரம் 6 மற்றும் தரம் 7 மாணவர்களுக்காக நடைபெற்றது. Today (2026.08.04), a guidance seminar was held at Yogapuram Maha Vidyalayam for Grade 6 and Grade 7 students on obtaining the Environmental Pioneer award under the programme conducted…

Read More

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் விபரம்.

நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களின் விபரம். Details of Students Selected for Admission to Universities Based on the Results of the 2025 General Certificate of Education (Advanced Level) Examination.

Read More

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

யோகபுரம் மகா வித்தியாலயத்தின் ஏற்பாட்டிலும்,மருதம் AGROTECH நிறுவனத்தின் அனுசரணையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு 2026.08.01 அன்று யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளர்களாக கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் பிரதி அதிபரும் யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவருமான திரு. சத்தியரூபன் அவர்களும், யாழ்ப்பாணம் இந்து ஆரம்பப் பாடசாலையின் ஆசிரியர் திரு. மதுரன் அவர்களும் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கில் யோகபுரம் ஆரம்பப் பாடசாலை, அணிஞ்சியன்குளம் தமிழ்…

Read More

பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு.

இன்று (2026.08.01) நடைபெற்ற யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில், 2026–2027 காலப்பகுதிக்கான புதிய நிர்வாகம் ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டது. 🔴தலைவர் திரு. க. சசிகரன் (அதிபர்) 🔴செயலாளர் திரு. தி. யோகானந்தராஜா 🔴உப செயலாளர் திரு. துளசிதாஸ் 🔴பொருளாளர் திரு. ஐ. சிவநிருபன் 🔴உறுப்பினர்கள் • திரு. சசிகுமார் • திருமதி. யசோதா • திருமதி. சுபாஜினி • திருமதி. சிந்துஜா • திரு. ஆனந்தபிரசாத் • திரு. ஜெயகாந்தன் •…

Read More

பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம்.

🚨அறிவிப்பு முன்னர் அறியத்தந்தமைக்கு அமைவாக, நாளை (2026.08.01) இலங்கை நேரப்படி பிற்பகல் 4.00 மணிக்கு, யோகபுரம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.மேலும், புலம்பெயர்ந்து வாழும் யோகபுரம் மகா வித்தியாலயப் பழைய மாணவர்கள்,நிகழ்நிலை (Online) [நிகழ்நிலை இணைப்பு(Zoom Link) நாளை பகிரப்படும்] வாயிலாகவும் இப்பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அனைவரையும் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🚨Announcement As previously informed, the…

Read More

2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.

இன்று (2026.07.31) எமது பாடசாலையின் காலை பிரார்த்தனையில், மாணவர்களுக்கான நற்சிந்தனையை வழங்குவதற்காக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் வருகை தந்திருந்தார்.இந்நிகழ்வின்போது, 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள யோகபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும், யோகபுரம் ஆரம்பப் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆசிகளையும் வழங்கி ஊக்கப்படுத்தினார்.எமது அழைப்பை ஏற்று வருகை தந்து, மாணவர்களுக்கு பயனுள்ள வழிகாட்டலையும் ஆசிகளையும் வழங்கிய மல்லாவி மத்திய…

Read More

தொகுதிப் பாடங்கள் தெரிவு தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல்.

இன்று (2026.07.31) யோகபுரம் மகா வித்தியாலயத்தில், தரம் 09 மாணவர்கள் தரம் 10 இற்கு முன்னேறும்போது தெரிவு செய்ய வேண்டிய தொகுதிப் பாடங்கள் தொடர்பான வழிகாட்டல் கலந்துரையாடல், தரம் 09 மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் நடைபெற்றது. இந்நிகழ்வில் வளவாளராக மல்லாவி மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபர் திருவாளர் ஜேசுதானந்தர் அவர்கள் கலந்து கொண்டார். Today (2026.07.31), a guidance discussion on the selection of basket subjects for Grade 9 students progressing to…

Read More